India vs Pakistan Match Pitch Report: இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் 2021 டி 20 உலகக் கோப்பையில் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கும். சூப்பர்-12 சுற்றின் நான்காவது போட்டியில் இருவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விளையாடுகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணி முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை போட்டி தொடங்கியதிலிருந்து, கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐசிசியின் டி 20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான 12 போட்டிகளிலும் இந்தியா இதுவரை வெற்றி பெற்றுள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை 5 முறை இந்தியா தோற்கடித்துள்ளது. உலகக் கோப்பையில் ஆறாவது முறையாக பாகிஸ்தான் அணியை தோற்கடிக்க இந்திய அணி முழுவீச்சில் களம் இறங்கும். 


எது சிறந்தது? முதலில் பேட்டிங் அல்லது பவுலிங் (Dubai International Cricket Stadium Report)
துபாய் சர்வதேச ஸ்டேடியம் ஒரு நல்ல ஸ்கோரிங் மைதானம். துபாயில் நடக்கும் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் விளையாடும் அணிகளின் சராசரி ஸ்கோர் 144 ஆகவும், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடும் அணிகளின் சராசரி ஸ்கோர் 122 ஆகவும் உள்ளது. இங்கு மொத்தம் 61 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 34 முறையும், சேசிங் அணி 26 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 


ALSO READ |  T20 World Cup பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் கதாநாயகர்கள் யார்?


பிட்ச் யாருக்கு சாதகமாக இருக்கும்? 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் கொஞ்சம் உதவியாக இருக்கும். அதே நேரத்தில், சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் எடுக்கவும் ரன் கட்டுப்படுத்தவும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் கடைசியாக இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கக்து. 


இன்று துபாயில் வானிலை எப்படி இருக்கும்? (Today Dubai Weather)
ஞாயிற்றுக்கிழமை துபாயில் வானிலை சற்று சூடாக இருக்கும். அதே நேரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் இரவு 7.30 மணிக்கு விளையாட களத்தில் வரும்போது, ​​அதிக வெப்பத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். இருப்பினும், போட்டியின் போது வீரர்கள் ஈரப்பதத்தின் சவாலை எதிர்கொள்வார்கள். துபாயில் பகலில் வெப்பநிலை 34°C ஆகவும் இரவில் 27°C ஆகவும் இருக்கும். போட்டி நடைபெறும் நேரத்தில் வானம் தெளிவாக இருக்கும். 


ALSO READ |  INDvsPAK ஆட்டைக்கு ரெடியா! வெற்றி பெற இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம்?


இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது மழை பெய்யுமா? (Will it rain during the India-Pakistan match?)
மழை பெய்ய 5 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. ஈரப்பதம் சுமார் 66 சதவிகிதம் இருக்க வாய்ப்புள்ளது மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 12-15 கிமீ வேகத்த்தில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ஆட்டத்தின் போது பனி பெய்தால், இரண்டாவது இன்னிங்சில் பந்துவீசுவது கடினமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், டாஸ் வெல்லும் கேப்டன் மிகவும் கவனமாக முடிவெடுக்க வேண்டும்.


டி20 போட்டி நிலவரம்:
இதுவரை 8 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள இந்திய - பாகிஸ்தான் விளையாடின போட்டிகளில், இந்திய அணி 7 முறையும், பாகிஸ்தான் அணி ஒரு முறையும் வென்றுள்ளது.  கடைசியாக இந்த இரு அணிகளும் மார்ச் 2016ல் நடந்த டி20 உலகக் கோப்பையில் சந்தித்தன, இந்த போட்டியில் இந்தியா 16 ஓவர்களில் 119 டார்கெட்டை அடித்து வெற்றி பெற்றது. 


ALSO READ | Ind vs Pak: இந்த இந்திய வீரர்களைக் கண்டு பதறுகிறதா பாகிஸ்தான் அணி? 


கருத்து பணிப்பு இந்தியாவுக்கு சாதகம்:
இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அதே உத்வேகத்துடன் களம் இறங்கவுள்ளது.  பாகிஸ்தான் அணியில் முன்னணி வீரர்கள் பலர் இன்றி புது இளம் அணியாக விளையாட உள்ளது.  இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR