IND vs PAK ICC T20 World Cup 2022: இந்திய அணி மெல்போர்னில் நெட்ஸ் பயிற்சிகளை முடிக்கும் முன்பே, பிளேயிங் லெவனில் யார் யார் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. முக்கியமாக ரிஷப் பந்த் அணியில் இருப்பாரா இல்லையா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.  இளம் விக்கெட் கீப்பர்-பேட்டர் பந்த்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.  ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கார்த்திக்கின் பங்கு அணியில் வேண்டும் என்று நினைக்கின்றனர்.  மேலும் பாகிஸ்தான் போட்டியில் தினேஷ் கார்த்திக்கே கீப்பிங்கும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | T20 world cup: ரிசர்வ் நாளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?


இந்தியா விளையாடிய பயிற்சி ஆட்டங்களில், பந்த் தலா 9 ரன்களுடன் திரும்பினார். பின்னர் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.  நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் வார்ம்-அப் வாஷ்-அவுட் செய்யப்பட்டதால், பந்த் தன்னை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் மற்றும் பயிற்சி ஆட்டங்களில் கார்த்திக் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், அணியில் அவரது இடம் உறுதியாக உள்ளது.  தினேஷ் கார்த்திக் மூன்று ஆட்டங்களில் 19, 10 மற்றும் 20 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் போட்டிக்கான பிளேயிங் லெவன் அணியில் பந்த் இடம் பெறமாட்டார் என்று கூறப்படுகிறது.



2022ல் மட்டும் தினேஷ் கார்த்திக் 19 இன்னிங்ஸ்களில் 181 பந்துகளில் 273 ரன்கள் எடுத்துள்ளார். பந்தைப் பொறுத்தவரை, அவர் 17 இன்னிங்ஸில் 338 ரன்கள் எடுத்துள்ளார். கார்த்திக் ஃபினிஷர் பாத்திரத்தில் சிறந்து விளங்கினார், 150.82 ஸ்ட்ரைக் ரேட்டில் உள்ளார். பந்தைப் பொறுத்தவரை, அவர் 136.84 ஸ்ட்ரைக் ரேட்டில் இருந்தாலும், 5-வது இடத்தில் அவரது பங்கு அணி நிர்வாகம் விரும்புவதாக இல்லை.  தினேஷ் கார்த்திக் தனது பிளேயிங் லெவன் அணியில் 7-வது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள உள்ளார். இந்தியாவின் முதல் 5 இடங்களில் மாற்றம் செய்ய வாய்ப்பு இல்லை என்றாலும், 6 மற்றும் 7-வது இடங்கள் சோதனைக்கு தயாராக உள்ளன. அக்சர் படேல் 6வது இடத்திலும், கார்த்திக் 7வது இடத்திலும் பேட் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா எடுக்க வேண்டிய மற்ற இரண்டு முடிவுகள் ஹர்ஷல் படேல் அல்லது முகமது ஷமி மற்றும் யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின். 



டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங். 


காத்திருப்பு வீரர்கள்: முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்


மேலும் படிக்க | T20 World Cup: வெஸ்ட் இண்டீஸை ஊதி தள்ளிய அயர்லாந்து; உலக கோப்பையில் இருந்து அவுட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ