ஆசியக் கோப்பை 2022 போட்டியில் இந்த ஆண்டு டி20 வடிவில் நடைபெறுகிறது. இலங்கையில் நடைபெற வேண்டிய ஆசிய கோப்பை போட்டி சில காரணங்களால் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை போட்டிகள் அடுத்த சில மாதங்களில் தொடங்கியுள்ள நிலையில் ஆசிய கோப்பை போட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது.  இதற்காக ஓய்வில் இருந்த அனைத்து வீரர்களும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.  விராட் கோலி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.  காயம் காரணமாக பும்ரா இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் அனைத்து வீரர்களுமே தங்களது முழு திறமையையும் காட்டி வருகின்றனர். இதனால் அணியில் யாரை எடுப்பது என்ற குழப்பம் பிசிசிஐக்கு அதிகரித்துள்ளது. ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் மீண்டும் இடம்பெடுத்துள்ளார். மேலும் சமீபத்திய போட்டிகளில் தீபக் ஹூடா சிறப்பாக விளையாடி வருகிறார்.  காயத்தில் இருந்து மீண்ட ஆல்ரவுண்ட் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சிலும் மாஸ்காட்டி வருகிறார்.  கே எல் ராகுல் தற்போது அணிக்கு திரும்பி உள்ளார்.


 



மேலும் படிக்க | இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை நேரலையில் இலவசமாக பார்ப்பது எப்படி?


பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் யார் யாருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், டாப் 5 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் என்று பிசிசிஐ சூசகமாக தெரிவித்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. அதில் முதல் படமாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல், அடுத்த இடங்களில் விராட் கோலி, ரிஷப் பண்ட் மற்றும் சூரியகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் அணியில் இவர்கள்தான் விளையாடப் போகிறார்கள் என்று பிசிசிஐ குறியீடு மூலம் தெரிவித்துள்ளது.  


மேலும் படிக்க | ‘ஆமா நான் மென்ட்டலி வீக்கா இருக்கேன்’ - உண்மையை உடைத்த கோலி; குவியும் பாராட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ