India vs Pakistan Cricket News Tamil : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இருக்கும் டாப் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் நிலையில், இந்தியாவைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தான் சென்று விளையாட ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியா மட்டும் மவுனம் காத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியாவின் நிலைப்பாட்டை சீக்கிரம் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கேட்டுக் கொண்டிருந்தது. அத்துடன் இந்த விவகாரத்தில் ஐசிசியே இறுதி முடிவெடுக்கட்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டு பாகிஸ்தானை தவிர வெளிநாடுகளில் இப்போட்டியை நடத்த அனுமதிக்கமாட்டோம், ஹைபிரிட் மாடலுக்கும் ஒத்துழைக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தோனி, விராட் வாய்ப்பு கொடுக்காததால் ஓய்வு பெற்ற 4 இந்திய கிரிக்கெட் வீரர்கள்


இதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்குமா? இல்லையா? என்பது இதுவரை சஸ்பென்ஸாகவே இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் கூட்டத்தில் கூட இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்படவில்லை. அத்துடன் இந்த தொடரை நடத்துவதற்காக மொத்தம் 70 மில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கியிருக்கும் ஐசிசி கூடுதல் செலவுகளுக்காக 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் ஒதுக்கியிருக்கிறது. ஒருவேளை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலில் நடைபெற்றால், ஐசிசி ஒதுக்கியிருக்கும் இந்த தொகை நிச்சயம் பத்தாது.


இந்தியா மட்டுமே ஹைபிரிட் மாடல் கேட்டுக் கொண்டிருப்பதால் அதற்கு செலவாகும் மொத்த தொகையும் பிசிசிஐ ஏற்கவும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் இதுகுறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இந்தியா சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது குறித்த எந்த விஷயத்தையும் பொதுவெளியில் பேசக்கூடாது என அந்நாட்டு நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. 


இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உருவாக்கியிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி உத்தேச அட்டவணைப் பட்டியலின்படி, இந்தியா அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டுமே விளையாடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன. அதனால், லீக் மற்றும் இறுதிப் போட்டி என இரண்டு முறை இந்த தொடரில் மோத வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவின் அடிப்படையிலேயே சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அட்டவணைகள் உறுதியாகும். ஒருவேளை இந்தியா பங்கேற்காவிட்டால், இலங்கை அணி கலந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.


மேலும் படிக்க | ஐபிஎல் 2025ல் தோனி இல்லை என்றால் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r