IND vs SA: இந்திய அணி அறிவிப்பு; ரிஷப் அவுட்; சஹா, அஸ்வினுக்கு இடம்
டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நாளை (புதன்கிழமை) விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணிக்கான 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
புதுடெல்லி: அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் (India vs South Africa) இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் விளையாடக்கூடிய பதினொரு பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ (BCCI) அறிவித்துள்ளது. விருத்திமான் சஹா (Wriddhiman Saha) மற்றும் ஆர். அஸ்வின் (Ravichandran Ashwin) ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இரு வீரர்களும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இந்த இரண்டு வீர்களும் 11 பேர் கொண்ட பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியும்.
இந்திய அணியில் யார் விக்கெட் கீப்பராக செயல்படுவார்கள் என்ற ஒரு பெரிய கேள்வி எழுந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரிஷாப் பந்த்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்பொழுது அணியில் இடம் பிடித்திருந்த விருத்திமான் சஹா வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தமுறை சஹாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ரிஷாப் பந்த் சரியாக செயல்படததால் சஹாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
குல்தீப் யாதவ், சுப்மான் கில், உமேஷ் யாதவ் ஆகியோரும் அணியில் இடம் பெறவில்லை. இந்த தொடரில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இருப்பார்கள். வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணிக்காக ஜடேஜா சிறப்பாக செயல்பட்டார். அணிக்கு இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் தேவைப்படும்போது, நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் களம் இறக்குவோம் எனவும் விராட் கோலி கூறினார்.
இந்திய அணி இடம் பெற்றுள்ள பதினொரு வீரர்களின் விவரம்:
விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, ஹனுமா விஹாரி, ரித்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா.
இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் 2 (புதன்கிழமை) முதல் அக்டோபர் 23 (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடரில் முதல் போட்டி வரும் புதன்கிழமை (நாளை) விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளும் கடும் பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர்.