புது டெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் (India vs South Africa) இடையில் மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகள், அதாவது லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெற உள்ள ஆட்டம், வெற்று அரங்கத்தில் விளையாடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஏனெனில் தொற்றுநோய் கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பை அடுத்து மார்ச் 15 (லக்னோ) மற்றும் மார்ச் 18 (கொல்கத்தா) ஆகிய இடங்களில் நடைபெற உள்ள போட்டிகளில் ரசிகர்கள் இன்றி வீரர்கள் மட்டுமே விளையாடுவார்கள் எனக் கூறப்பட்டது.


ஆனால் பி.டி.ஐ செய்தி நிறுவனமான அளித்த தகவலின் படி, இரு அணிகளுக்கும் இடையிலான மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.


முன்னதாக, டாஸ் கூட நடக்காமல் மழை காரணமாக இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. அதேபோல இறுதிப் போட்டி அடுத்த வாரம் புதன்கிழமை கொல்கத்தாவில் உள்ள சின்னமான ஈடன் கார்டனில் நடைபெற இருந்தது.


நாடு கடுமையான தொற்றுநோயை எதிர்கொள்கிறது. ஐபிஎல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்த நேரத்தில், இந்தத் தொடரும் நிறுத்தப்படுவது தான் சரி என்று பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறினார். தென்னாப்பிரிக்க அணி டெல்லிக்கு வந்ததும், விமானம் மூலம் தங்கள் சொந்த நாட்டுக்கு புறப்பட்டு செல்வார்கள் எனவும் கூறினார்.


நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் கடந்த ஆண்டு ரன்னர்-அப் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) இடையே பிளாக்பஸ்டர் மோதலுடன் இந்த போட்டி மார்ச் 29 அன்று தொடங்க பிசிசிஐ (The Board of Control for Cricket in India) திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுநோய் (Coronavirus Threat) அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டுக்காக தொடரை வரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.