இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி, பல்லெகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. 


இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. 


அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன.


இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.