22:00 10-01-2020
இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




புனே: இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியா மற்றும் இலங்கை (India vs Sri Lanka) கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து, இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த லோகேஷ் ராகுல் மற்றும் ஷிகர் தவன் அதிரடியாக ஆடி இலங்கை அணியின் பந்து வீச்சாளரை திணறடித்தனர். இருவரும் அரை சதத்தை பூர்த்தி செய்தனர்.


97 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இந்திய அணி இழந்தது. தவன் 52(36) ரன்களும், ராகுல் 54(36) ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். அதன் பிறகு வந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 6(2) ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல ஸ்ரேயாஸ் ஐயர் 4(2) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 


அதன் பிறகு மனிஷ் பண்டேவுடன் இணைந்த கேப்டன் விராட் கோலி அதிரடியாக ஆடினார். இரண்டு ரன்கள் எடுக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக 26(17) ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி அவுட் ஆனார். பின்னர் வாஷிங்டன் சுந்தர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி திரும்பி சென்றார்.


ஒரு பக்கம் தொடர்ந்து ஆடிய மனிஷ் பாண்டே 31(18) ரன்கள் எடுத்தார். மறுபுறம் சர்துல் தாக்கூர் 8 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். இருவரும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.


இறுதியாக இந்திய 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணியின் சார்பில் லக்ஷன் சந்தகன் (Lakshan Sandakan) மூன்று விக்கெட்டை கைப்பற்றினார். வாணிந்து ஹசரங்கா மற்றும் லஹிரு குமாரா தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இலங்கை அணி வெற்றி பெற 202 ரன்கள் தேவை.


இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது மற்றும் இரண்டாவது போட்டியில் இந்தியா (Team India) எளிதாக வெற்றியைப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில் இந்த தொடரில் 1-0 என்ற முன்னிலை இந்திய அணி பெற்றுள்ளது. இன்று வெற்றி பெரும் பட்சத்தில் தொடர் இந்திய அணிக்கு கிடைக்கும். அதேவேளையில் இலங்கை அணி வெற்றி பெற்றால் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும். அதாவது டி20 தொடர் சமநிலையில் நிறைவடையும்.


இந்தியாவும் இலங்கையும் இதற்கு முன்னர், இதே மைதானத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியை 101 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.