இலங்கை அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது. காயம் காரணமாக கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்த தொடரில் விளையாடவில்லை. விராட்கோலி மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஓய்வில் இருந்த பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள நிலையில், பிளேயிங் 11-ல் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 14 கோடி போச்சா? சிஎஸ்கே அணியில் சாஹர் விளையாடுவது சந்தேகம்!


ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதால், இந்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு வீரரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதனால், இப்போட்டியில் ஓபனிங் யார் இறங்குவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். அவர்களே இந்தப் போட்டியிலும் களமிறங்குவார்களா? அல்லது ரோகித் சர்மா ஓபனிங் களமிறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.



விராட் கோலி, ரிஷப் பன்டுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்க உள்ளனர். இருவருக்கும் இந்த தொடர் மிக முக்கியமான தொடராகும். இந்த தொடரில் இவர்கள் சரியாக விளையாடாவிட்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறும் கனவு கனவாகவே போய்விடும். பினிஷர் ரோலில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் தீபக் ஹூடா விளையாட உள்ளனர். இருவரும் சிறப்பாக விளையாடி வருவதால் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது ரோகித் சர்மா முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.


பந்துவீச்சில் ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஆவேஷ்கான், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா என ஒரு பட்டாளமே இருக்கிறது. இதில் பும்ரா, ஜடேஜா, சாஹல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும். மற்றவர்களில் யார் பிளேயிங் 11ல் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரைப் பொறுத்தவரை வீரர்கள் தேர்வில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு கேப்டன் ரோகித் சர்மா தள்ளப்படுள்ளார். 


மேலும் படிக்க | இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் யார்? இருவருக்கு இடையே கடும்போட்டி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR