இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா இடம் பெறவில்லை.  இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய டி20 அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது, ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.  ​​டாப்-3 பேட்ஸ்மேன்களான ரோஹித், விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் டி20 அணியில் இல்லை. ரிஷப் பந்த் இரு அணிகளிலும் இல்லாத நிலையில், சமீபமாக சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பிரித்வி ஷாவின் பெயர் இல்லாமல் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | India vs Srilanka: முக்கிய வீரரை அதிரடியாக நீக்கிய பிசிசிஐ!



பிரித்வி ஷா கடைசியாக ஜூலை 2021ல் இலங்கைக்கு எதிரான டி20ல் இந்தியாவுக்காக விளையாடினார்; இளம் தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா மும்பைக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில், பிரித்வி ஷா டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 152.97 ஸ்ட்ரைக் ரேட்டில் 10 இன்னிங்ஸ்களில் 283 ரன்கள் எடுத்தார். இருப்பினும் பிரித்வி ஷாவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் கதவுகள் மூடப்பட்டன.  இந்நிலையில் இந்த தொடரிலும் மீண்டும் இந்திய அணியில் இல்லாத பிறகு, அவர் தனது Instagram story-ல் ஒரு ரகசிய குறிப்பை பகிர்ந்துள்ளார்.  அதில் "எனக்கு மிகவும் தேவைப்பட்டது, யாரோ அவற்றை இலவசமாகப் பெற்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.  மேலும் தற்போது உள்ள 2k கிட்ஸ் சண்டை வந்தால் DP-யை எடுப்பதை போல, இவரும் தனது புகைப்படத்தை எடுத்துவிட்டார்.



இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த பாண்டியா, ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மாவின் கீழ் துணை கேப்டனாகவும் பணியாற்றுவார். கேஎல் ராகுல் இதற்கு முன்பு ரோஹித்தின் துணை கேப்டனாக இருந்தார். மேலும், நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை வழிநடத்திய ஷிகர் தவான், அணியில் இடம் பெறவில்லை. முந்தைய ஒருநாள் போட்டிகளின் போது கட்டை விரலில் அடிபட்டதால் ரோஹித் இந்த மாதம் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரையும் தவறவிட்டார்.


மேலும் படிக்க | IPL Auction: உச்சகட்ட விரக்தியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ