இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி கிங்ஸ்டனில் இன்று நடக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. 


முதலாவது ஆட்டம்:- மழையால் பாதியில் ரத்தானது


இரண்டாவது ஆட்டம்:- இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மூன்றாவது ஆட்டம்:- இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


4-வது போட்டி:- வெஸ்ட் இண்டீஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கிங்ஸ்டனில் இன்று நடக்கிறது. 


போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல்:-


இந்தியா: ஷிகர் தவான், ரஹானே, விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக் அல்லது யுவராஜ்சிங் அல்லது ரிஷாப் பான்ட், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.


வெஸ்ட் இண்டீஸ்: எவின் லீவிஸ், கைல் ஹோப், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், ஜாசன் முகமது, ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ரோவ்மன் பவெல், ஆஷ்லே நர்ஸ், தேவேந்திர பிஷூ, அல்ஜாரி ஜோசப், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.


இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.