அதிரடி பந்துவீச்சால் நியூசிலாந்தை தும்சம் செய்த இந்திய மகளிர் அணி!
நியூசிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது!
நியூசிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது!
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் ஒருபகுதியாக நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடிது. நியூசிலாந்து அணி தரப்பில் களமிறங்கிய தொடக்க வீரங்கனைகள் பேட்ஸ் 36(54), டிவெய்ன் 28(38) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனையடுத்து நியூசிலாந்து அணி ஆட்டத்தின் 48.4-வது பந்தில் இந்திய அணி பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்தியா களமிறங்கியது.
தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஜாம்மியா ரோட்ரிகியூஸ் 81(94), ஸ்மிரித்தி மந்தனா 105(104) ரன்களை குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். அதிரடி காட்டிய இருவீராங்கனைகளும் ஆட்டத்தின் 33-வது ஓவர் முடிவில் வெற்றி இலக்கான 193 ரன்களை எட்டி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தனர்.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி வரும் ஜனவரி 29-ஆம் நாள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.