இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 316 ரன்களில் ஆட்டம் இழந்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார் 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்து 112 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 263 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 375 ரன்கள் முன்னிலை பெற்றது. 


376 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் துவக்க வீரர் லதம் -குப்தில் ஜோடி நிதானத்துடன் செயல்பட்டனர். இதன் பிறகு நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து அணி போராடியது. ஆனால் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


 



 


இதன்முலம் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.


 



 


தற்போது இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.