தவெக கட்சி கொடிக்கு எழுந்த பெரிய ஆபத்து நீங்கியது - தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்

தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 30, 2024, 11:35 AM IST
  • தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி சர்ச்சை
  • பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்த விவகாரம்
  • கடிதம் மூலம் பதில் அனுப்பியது இந்திய தேர்தல் ஆணையம்
தவெக கட்சி கொடிக்கு எழுந்த பெரிய ஆபத்து நீங்கியது - தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம் title=

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானைகள் இரண்டு இடம்பெற்றிருந்தற்கு பகுஜன் சமாஜ் கட்சியில் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விஜய் தன் கட்சி கொடியில் இருக்கும் யானை உருவங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது. ஆனால், விஜய்யின் தவெக கட்சி இதனை பொருட்படுத்தவில்லை. இதனால், பகுஜன் சமாஜ் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. அதில், தங்களது கட்சி கொடியிலும் யானை உருவம் இருப்பதாகவும், அதனைப் போலவே இப்போது நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழக கொடியிலும் யானைகள் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டது.

மேலும் படிக்க | Indian Post Office | தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு இருக்கா? இந்த அறிவிப்பு உங்களுக்கானது!

இந்த கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பியிருக்கும் தேர்தல் ஆணையம், தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தலையிடாது என தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகளின் கொடி மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்களுக்கு தேர்தல் ஆணையம் எப்போதும் அங்கீகாரம் கொடுத்ததில்லை எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் கொடி, சின்னம் ஆகியவை இந்திய சட்டப்பிரிவு 1950 மற்றும் மற்ற சட்டப்பிரிவுகளுக்கு எதிராக இருக்காதவாறு பார்த்துக் கொள்வது அரசியல் கட்சிகளின் கடமை என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேலும், "தமிழக வெற்றிக் கழகம் இன்னும் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டு, சின்னம் கேட்டு அக்கட்சி முறையிடும்போது மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் பட்டியலில் இருக்கும் ஏதேனும் ஒரு சின்னம் அக்கட்சிக்கு ஒதுக்கப்படும்" என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், பகுஜன் சமாஜ் கட்சியினால் எழுந்த சிக்கல் தமிழக வெற்றிக் கழகத்துக்கு நீங்கியது. அக்கட்சியினர் இப்போது உருவாக்கியுள்ள கொடியை பயன்படுத்த எந்த தடையும் இல்லை. அதேநேரத்தில் அக்கட்சியின் கொடி நடுவே போர் யானைகளுக்கு நடுவே பூ இருக்கும் வகையில் தேர்தல் சின்னம் வேண்டும் எனக்கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிடும்போது, அந்த சின்னம் கிடைக்குமா? என்பது தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்தது.

மேலும் படிக்க | இது லிஸ்ட்லையே இல்லையே... செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மதுவிலக்கு துறை - ஸ்டாலினின் திடீர் ட்விஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News