இந்தியா இன்னிங்க்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்க்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் இரண்டாவது போட்டி ஜூலை 3 ஆம் தேதி காலை கொழும்புவில் துவங்கியது. டாஸ் வென்று இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 158 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அதன் பின் தனது முதல் இன்னிங்க்சை துவங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 5209/2 என்ற நிலையில் இருந்தது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை 10 மணி அளவில் துவங்கியது, ஆட்டத்தை ட்ராவ் செய்யும் முனைப்பில் இலங்கை நிதானமாக விளையாடி வந்தது.
இலங்கை அணியின் திமுத் கருணரத்னே 141(307) நிதானமாக விளையாடி தனது சதத்தினை பூர்த்தி செய்தார். பின் மென்டிஸ் தன் பங்கிற்க்கு 110(135) ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தனர், எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இவ்ருவரின் சதங்களும் வீணானது.
இந்நிலையில் இலங்கை அணி 386 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது போராடி தோல்வி அடைந்தது.
இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை விழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.