நாங்க வேற மாறி! நியூ. அணியை ஆல் அவுட் செய்து வெற்றி பெற்றது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3 - 0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று இந்திய அணி இந்தத் தொடரை கைப்பற்றியது. இதனால் கடைசி போட்டியிலாவது வெல்ல வேண்டும் என நியூசிலாந்து அணி இன்று விளையாடியது. இந்திய அணியில் கே எல் ராகுலுக்கு பதிலாக இசான் கிசனும், அஸ்வினுக்கு பதிலாக சஹாலும் அணியில் இடம் பெற்றனர். ருத்ராஜ்க்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முதல் இரண்டு போட்டிகளைப் போலவே இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா மாறுதலாக பேட்டிங் தேர்வு செய்தார்.
ALSO READ டிராவிட் தலைமையில் சாதித்துக் காட்டிய இந்திய அணி!
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள். ஈடன் கார்டன் தனது கோட்டை என்று மீண்டும் நிரூபித்த ரோகித் சர்மா 31 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். இன்று அரை சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் ரோஹித். இஷன் கிஷன் 29, சூர்யகுமார் யாதவ் 0, பந்த் 4 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் வெங்கடேசஸ் ஐயர் கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. கடைசி ஓவரில் அதிரடி காட்டிய தீபக் சஹர் ஒரே ஓவரில் 23 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்தது. சிறப்பாக பந்து வீசிய சான்ட்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடின இலக்கை எதிர்த்து ஆடிய நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் சரிந்தது. அக்சரின் சுழலில் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். கேப்மன் மற்றும் பிலிப்ஸை 0 ரன்களில் வெளியேறினார் அக்சர். அதிரடியாக விளையாடிய கப்தில் 4 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் அடித்தார். அதன்பின் இறங்கிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்தனர். இந்திய அணி பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 2 ரன் அவுட்களை செய்தனர்.
17.2 ஓவரில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது நியூஸிலாந்து. சிறப்பாக பந்து வீசிய அக்சர் பட்டேல் 3 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் வென்றதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3 - 0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவியேற்ற முதல் தொடரிலேயே இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.
ALSO READ டி20 தொடரில் இருந்து விராட் கோலி விலகியது சரியான முடிவா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR