இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் மோதும் 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள இந்தத் தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் முகாமிட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  அதுமட்டுமின்றி நீண்ட வருடங்கள் சதம் அடிக்காமல் இருக்கும் கோலி இந்த தொடரில் சதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



இந்திய அணியானது தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணையை இன்னும் சற்று நேரத்தில் எதிர்கொள்ளவிருக்கிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.


இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆசிய கோப்பையில் விளையாடவுள்ள சென்ற இந்திய அணியுடன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அவர் செல்லவில்லை. இதையடுத்து இடைக்கால பயிற்சியாளராக லட்சுமணன் செயல்பட்டார். 


 



இந்நிலையில் ராகுல் டிராவிட் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார். அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்தது. இதனையடுத்து, துபாய்க்கு சென்று இந்திய அணியுடன் இணைந்துள்ளார். இடைக்கால பயிற்சியாளராக இருந்த லட்சுமணன் பெங்களூருக்கு திரும்பினார். ராகுல் டிராவிட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் அணி வீரர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.


மேலும் படிக்க | INDvsPAK: பிளேயிங் 11-ல் விளையாட போவது இவர்கள் தான்! சூசகமாக அறிவித்த பிசிசிஐ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ