அவர் எப்படிப்பட்ட பௌலர் தெரியுமா?... ரோஹித் ஷர்மா புகழாரம்
உமேஷ் யாதவ் தரமான பந்துவீச்சாளர் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20ஆம் தேதி மொகாலியில் தொடங்குகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த தொடரில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்கு பதில் உமேஷ் யாதவ் அணியில் இடம் பெறுவார் என்ற பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இது குறித்து மொகாலியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, “உமேஷ் யாதவ் ஒரு தரமான பந்துவீச்சாளர், தனது திறன் குறித்து பல முறை நிரூபித்தவர், இந்த தொடர் அவருக்கு சிறந்த வாய்ப்பை வழங்கும். உமேஷ், ஷமி போன்றவர்கள் மீண்டும் வெற்றிகரமாக செயல்பட ஒரு குறிப்பிட்ட வடிவ கிரிக்கெட்டில் விளையாட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களை நிரூபித்துள்ளனர்.
இதேபோல் இளம் வீரர்களும் தங்களை நிரூபிக்க வேண்டும், அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் அணிக்கு அழைக்கப்படுவார்கள் என்றார்.
அதனையடுத்து, விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், விராட் கோலிதான் எங்களின் மூன்றாவது ஆட்டக்காரர். ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் விளையாடிய விதத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஷமி வெளியேற்றம்! இந்த வீரருக்கு வாய்ப்பு?
மேலும் படிக்க | இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ்தான் காரணம் - புஜாரா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ