இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் மழை பெய்ததால், ஈரப்பதம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு, நண்பகலில் ஆட்டம் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. எனவே இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.


முதல் ஓவரில் இலங்கை வீரர் லக்மால் வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார் இந்திய தொடக்க வீரர் ராகுல்(0). முதல் பந்தில் டக்-அவுட் ஆன 6_வது இந்திய வீரர் ஆவார். இதற்கு முன்பு ஐந்து வீரர்கள் முதல் பந்திலேயே அவுட் ஆகி உள்ளனர்.


டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலேயே அவுட் ஆன இந்திய வீரர்கள் :-


1. எஸ். கவாஸ்கர் (மூன்று முறை)
2. சுதிர் நாயக்
3. ஃடபள்யு.வி. ராமன்
4. எஸ்எஸ் தாஸ்
5. ஃடபள்யு ஜாப்பர்
6 கே.எல். ராகுல.