Virat Kohli century: சதமே அடிக்காமல் ஆண்டை முடித்த விராட் கோலியின் மோசமான 2021
ஒரு காலத்தில் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்து ரன் மெஷின் என்று பெயர் பெற்ற விராட் கோலி, நவம்பர் 2019 முதல் இதுவரை சதம் அடிக்கவில்லை
புதுடெல்லி: 2021ஆம் ஆண்டு, இந்திய கேப்டர்ன் விராட் கோலிக்கு பெரிய வெற்றி எதையும் பெற்றுத்தரவில்லை. இந்த ஆண்டு அவரால் ஒரு சதத்தைக் கூட அடிக்க முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்திய கேப்டன் விராட் கோலி 2021 ஆம் ஆண்டின் தனது இறுதி போட்டியிலாவது சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்புகளுக்கும் முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது.
நேற்று (டிசம்பர் 29, 2021 புதன்கிழமை) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 32 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார் கோலி.
முதல் இன்னிங்ஸில் 35 ரன்கள் எடுத்த கோலி, பாக்சிங் டே டெஸ்டில் கோஹ்லி 5-வது இடத்தில் பேட்டிங் செய்தார். அவர், இந்த ஆண்டில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பதால், குறைந்தபட்சம் இரண்டாவது இன்னிங்க்சில் நூறு ரன்களைக் கடந்து 2021ஆம் ஆண்டை வெற்றியுடன் முடிப்பார் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
மார்கோ ஜான்சனின் பந்தை எதிர்கொண்ட கோலி செய்த தவறு, அதுவரை சிறப்பாக ஆடிவந்த அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
READ ALSO | தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!
முதல் இன்னிங்ஸில், விராட் கோலியை லுங்கி என்கிடி அவுட் செய்தார். இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்திய கேப்டன் 32 பந்துகளில் 18 ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்த ஆண்டு கோலிக்கு விளையாட்டில் பெரியதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.
ஒரு காலத்தில் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த ரன் மெஷின், நவம்பர் 2019 முதல் சதம் அடிக்கவில்லை என்பது அவருக்கு வருத்தம் தரும் செய்தியாகும். சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் இரண்டு வருடங்களை கடந்துள்ளார் என்பது பல்வேறு அனுமானங்களை எழுப்பியுள்ளது.
ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (India vs South Africa) கோஹ்லி தனது இயல்பான விளையாட்டை தொடர்வார் என்று அனைவரும் நம்பினார்கள். இருப்பினும், இந்திய கேப்டனால் தனது விருப்பத்தையும், பிறரது எதிர்ப்பார்ப்பையும் நிறைவேற்ற முடியவில்லை.
தென்னாப்பிரியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது, இது முதல் டெஸ்டில் வெற்றிபெற சிறந்த ஸ்கோர் என்பதால், விராட்டுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இந்திய அணிக்கு ஏற்படாது என்று கூறப்படுகிறது.
ALSO READ | பாஜகவில் இணைந்த மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR