கேப்டனாக மிக விரைவில் 5000 ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் கோலி...
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி வெள்ளிக்கிழமை `ஒரு அணியின் கேப்டனாக இருந்து வேகமாக 5,000 டெஸ்ட் ரன்களை’ எட்டிய வீரர் எனும் பெருமையினை பெற்றார்.
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி வெள்ளிக்கிழமை 'ஒரு அணியின் கேப்டனாக இருந்து வேகமாக 5,000 டெஸ்ட் ரன்களை’ எட்டிய வீரர் எனும் பெருமையினை பெற்றார்.
இந்த மைல்கல்லை எட்ட கோலிக்கு 86 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இச்சாதனையினை புரிய 97 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார்.
டெல்லி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய இன்னிங்ஸின் போது கோலி தனது 32-வது ரன் எடுத்தபோது இந்த சாதனையினை புரிந்துள்ளார். இது இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியாகும்.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 106 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் ஒரே ஒரு அமர்வின் கீழ் அந்த ரன்களை இந்தயா முந்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா முறையே 14 மற்றும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கோலி மற்றும் சடேஷ்வர் புஜாரா இந்தியாவை முன்னிலை பெற செய்தனர்.
முன்னதாக, வங்கதேச அணியின் சரிவை உறுதிபடுத்தியது இஷாந்த் சர்மா தான். 22 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது மூலம் அவர் வங்கதேச அணியை நிலைகுலைய வைத்தார். வங்கதேச இன்னிங்ஸின் போது வீசப்பட்ட 30.3 ஓவர்களில், ஒரு ஓவர் மட்டுமே ஒரு சுழற்பந்து வீச்சாளரால்(ரவிந்திர ஜடேஜா) வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.