இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.  முதல் போட்டி டிராவிலும்,  இரண்டாவது போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அணியை மாற்றாமல் அதே வீரர்களுடன் விராட் கோலி களமிறங்குகிறார். இதுவரை 64 போட்டிகளில் கேப்டனாக இருந்த விராட் கோலி அணியை மாற்றாமல் விளையாடுவது இது நான்காவது முறை.  இதற்கு முன் 2018-ஆம் ஆண்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி, 2019 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி, 2019-20 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் இன்று நடைபெற உள்ள போட்டி என இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தனது அணியை மாற்றாமல் அடுத்து போட்டிகளில் விளையாடியுள்ளார் விராட் கோலி.  அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை. 



மேலும் இப்போட்டி நடைபெற உள்ள லீட்ஸ் மைதானத்தில் இந்திய அணி 19 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட உள்ளது.  கடைசியாக 2002ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணியின் மூன்று பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தனர்.  ராகுல் டிராவிட் 148 ரன்களும், சச்சின் டெண்டுல்கர் 193 ரன்களும், சவுரவ் கங்குலி 128 ரன்களும் அடித்து இருந்தனர்.  எனவே இன்றைய டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி புஜாரா தானே மூன்று பேரும் சதம் அடிப்பார்கள் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


ALSO READ 19 ஆண்டுகளுக்குப் பிறகு லீட்ஸ் மைதானத்தில் ஆடப்போகும் இந்திய அணி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe