சென்னை ஓபனில் தோல்வியடைந்தார் கர்மன் தண்டி
சென்னை ஓபன் டென்னிஸில் இந்திய வீராங்கனை கர்மன் தண்டி தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார்.
சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 359ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் கர்மன் கவுர் தண்டி, அனுபவம் வாய்ந்த யூஜெனி புசார்ட்டை (கனடா) எதிர்கொண்டார். முதல் செட்டை எளிதில் இழந்த கர்மன் தண்டி இரண்டாவது செட்டில் எதிராளிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். 5-2 என்ற முன்னிலையுடன் அந்த செட்டை வெல்லும் நிலைக்கு நகர்ந்தார். ஆனால் அதே உத்வேகத்தை அவரால் தொடர முடியாததால் சரிவிலிருந்து மீண்டார் புசார்ட். அந்த செட்டை 6-6 என சமன் செய்தார்.
இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட டைபிரேக்கரில் புசார்ட் வெற்றி பெற்றார். 2 மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் புசார்ட் 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் தண்டியை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். கர்மன் தண்டியின் தோல்விக்கு, அவர் பந்தை வலுவாக வெளியே விரட்டுவது, வலை மீது அடிப்பது உள்ளிட்டவைகளதான் காரணம் என டென்னிஸ் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
அத்துடன் சீதோஷ்ண நிலையும் அவரை சோர்வடையச் செய்ததாகவும் கருதப்படுகிறது. கர்மனின் தோல்வியால் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பயணம் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவும் தோற்று வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய கர்மன் தண்டி, “புசார்ட் நல்ல வீராங்கனை. இன்று விளையாடியதை அவர் தொடர்ந்து ஒருங்கிணைக்க முடிந்தால் தரவரிசையில் அவர் இப்போது இருப்பதைவிட நல்ல நிலைக்கு செல்வாசர்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ