Asian Games 2023: சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டு போட்டி தொடர் கடந்த செப். 23ஆம் தேதி கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நேற்றில் இருந்து விளையாட்டு போட்டிகள் தொடங்கிய நிலையில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. குறிப்பாக, ஆசிய விளையாட்டு தொடரின் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முதலாக இந்தியாவும் விளையாடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவே முதல்முறை


ஆசிய விளையாட்டு போட்டிகளில் கடைசியாக 2014ஆம் ஆண்டில் கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டது. ஆனால், அதில் இந்தியா மற்ற போட்டிகளில் பங்கேற்ற நிலையில், கிரிக்கெட்டில் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கேற்க பிசிசிஐ கடந்த மாதம் அனுமதியளித்தது.


இதையடுத்து, மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று (செப். 25) நடைபெற்றது. இந்திய அணியுடன், இலங்கை அணி இறுதிப்போட்டியில் மோதியது. ஹாங்சோ பிங்ஃபெங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.


மேலும் படிக்க | ஷர்துலை கைக்கழுவும் இந்திய அணி... இந்த முக்கிய வீரருக்கும் ஓய்வு - அடுத்தடுத்த பிளான் என்ன?


ஸ்மிருதி - ரோட்ரிக்ஸ் அசத்தல் 


அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 46 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களையும் எடுத்தனர். ஆனால், மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 116 ரன்களை குவித்தது. பிரபோதனி, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர ஆகிய இலங்கை பந்துவீச்சாளர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 


இதன்பின் களம்கண்ட இலங்கை மகளிர் அணிக்கு ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது. நட்சத்திர பேட்டர் சமாரி அட்டப்பட்டு உள்ளிட்ட டாப்-ஆர்டர்கள் பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்களும் பெரிதாக ரன்களை சேர்க்காததால், இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்களை மட்டுமே எடுத்தனர். குறிப்பாக, இந்திய பந்துவீச்சில் டிடாஸ் சாது 3, ராஜேஸ்வரி கெயக்வாட் 2, தேவிகா வைத்யா, தீப்தி சர்மா, பூஜா வத்ஸர்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 


இதன்மூலம், பங்கேற்ற முதல் ஆசிய விளையாட்டு தொடரிலேயே தங்கம் பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. மேலும், இந்திய ஆடவர் அணிக்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் செப். 27ஆம் தேதி முதல் அக். 7ஆம் தேதி வரை நடைபெறு இருக்கிறது. 



தற்போதைய பதக்க பட்டியல் 


இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் 32 தங்கம், 13 வெள்ளி, 5 வெண்கலம் என 50 பதக்கங்களுடன் சீனா உள்ளது. கொரியா 6 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 4 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஜப்பான மூன்று தங்கத்துடனும், ஹாங் காங் 2 தங்கத்துடனும் முறையே 4ஆவது, 5ஆவது இடத்தில் உள்ளன. 


மேலும் படிக்க | விராட் கோலி இடத்திற்கே ஆப்பு வைக்கும் ஷ்ரேயாஸ்... இந்தியாவின் நம்பர் 3 இடம் யாருக்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ