இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானின் நூர் சுல்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் அரையிறுதியில் தனது இடத்தை முன்பதிவு செய்த பின்னர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற நான்காவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த போட்டித்தொடரின் 86-கி எடை பிரிவின் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டெபன் ரெய்ச்முத்தை எதிர்கொண்ட தீபக் 8-2 என்ற புள்ளிக்கணக்கில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தார்.


உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியனான தீபக் பூனியா முதல் முறையாக சீனியர் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ள நிலையில், தான் பங்கேற்ற முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிக்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.


முன்னதாக இவர் காலிறுதியில் கொலம்பியாவின் Carlos Arturo Mendez-ஐ எதிர்த்து களமிறங்கிய போது 3-6 என்ற நிலையில் பின்தங்கி இருந்தார், பின்னர் அடுத்த சில நொடிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 2020-ல் டோக்யோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.


மேலும், உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற 5-வது இந்திய வீரர் என்ற சிறப்பையும் தீபக் பெற்றுள்ளார்.