ஆப்கானிஸ்தான் கையில் இந்தியாவின் அரைஇறுதி கனவு!
உலக கோப்பை டி20 போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
உலக கோப்பை டி20யில் குரூப் போட்டிகள் முடியும் நிலையில் உள்ளன. குரூப் Bயில் பாகிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது. இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் போராடி வருகின்றனர். இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டியில் படுதோல்வி அடைந்தது. அதன் காரணமாக மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையே மிகப்பெரும் வெற்றியை பெற்று கூடுதல் ரன் ரேட்டை அடைந்தது இந்தியா. தற்போது இந்திய அணி நான்கு போட்டிகள் விளையாடி இரண்டு போட்டியில் வெற்றியும் இரண்டு போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இருப்பினும் மற்ற அணிகளை விட கூடுதல் ரன் ரேட்டை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி அதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்று நியூசிலாந்து அணி தனது கடைசி போட்டியை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி நம்பியா அணியுடன் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. மாறாக நியூசிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறும். இதன் காரணமாக நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடக்கும் இன்றைய போட்டி இந்திய ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. மதியம் 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ALSO READ பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் முன்னுள்ள சவால்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR