இந்தியா அணி கேப்டன் விராத் கோலி பத்மஸ்ரீ விருது பெற்றார்.
சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி, கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
பத்ம விருது வழங்கும் விழாவில் விராத் கோலிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கையால் பத்மஸ்ரீ விருதை விராத் கோலி பெற்றார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விராத் கோலி கூறியதாவது:-
இந்த மதிப்பு மிக்க விருதை குடியரசுத் தலைவர் கையால் பெற்றது மிகிழ்ச்சி. ஜெய் ஹிந்த்” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சத்குரு ஜக்கி வாசுதேவ், தமிழகத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றனர்.