3rd T20 போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அபரா வெற்றிபெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது!!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அபரா வெற்றிபெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது!!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். சிக்சர், பவுண்டரிகளாக பறக்க விட்டனர்.
ஆட்டத்தின் 3வது ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் சர்மா சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்து அசத்தினார். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 34 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி என 71 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய ரிஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். மறுபுறம் ராகுல் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். கேப்டன் விராட் கோலி அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் 91 ரன்னில் அவுட்டானார். விராட் கோலி 5 சிக்சர், 3 பவுண்டரியுடன் 21 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார். இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, 241 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கி விளையாடியது. தொடக்க ஆட்டக்கார ர் சிமன்ஸ் 7 ரன்களுக்கும், பிராண்டன் கிங் 5 ரன்களுக்கும், ஹெட்மேயர் 41 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பூரன் டக் அவுட் ஆன நிலையில், பொல்லர்டு மட்டும் நிலைத்து நின்று 68 ரன்கள் எடுத்தார்.
ஜான் ஹோல்டர் 8 ரன்களிலும், கேரி 5 ரன்களிலும், ஹைடன் வால்ஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்த வந்த வீர ர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரை இந்திய அணி இரண்டு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை கே.எல்.ராகுலும், தொடர் நாயகன் விருதை கேப்டன் விராட் கோலியும் பெற்றனர்.