INDvsENG: இங்கிலாந்து அணிக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் ஜோஸ் பட்லர்
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 521 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
67 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 330 ரன்கள் தேவை. 62 ரன்களுக்கு நான்கு விக்கெட் இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஜோடி நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஜோஸ் பட்லர் 82(129) ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 45(127) ரன்களும் எடுத்து களத்தில் ஆடி வருகின்றனர்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று தேநீர் இடைவெளி வரை இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 348 ரன்கள் தேவை.
தற்போதைய நிலவரப்படி, ஜோஸ் பட்லர்* 67(115) மற்றும் பென் ஸ்டோக்ஸ்* 42(111) ரன்கள் எடுத்து களத்தில் உள்ளன
இங்கிலாந்து அணி 62 ரன்களுக்கு நான்கு விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர்* 56(99) மற்றும் பென் ஸ்டோக்ஸ்* 42(99) நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இருவரும் இணைந்து 100(195) ரன்கள் எடுத்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து அணி 58 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற 359 ரன்கள் தேவை.
55.1 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர்* 51(93) தனது அரை சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இது இவரின் 9_வது அரை சதமாகும். பென் ஸ்டோக்ஸ்* 39(92) ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்து வெற்றி பெற 367 ரன்கள் தேவை.
46 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட்இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர்* 35(69) மற்றும் பென் ஸ்டோக்ஸ்* 21(62) நிதனாமாக ஆடி வருகின்றனர். இங்கிலாந்து வெற்றி பெற 401 ரன்கள் தேவை.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 521 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிகமில் கடந்த ஆகஸ்ட்., 18-ஆம் நாள் துவங்கியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 161 மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா கோலியின் 103(197) அதிரடி சதத்தாலும், புஜாரா 72(208), பாண்டியா 52(52) அரைசதத்தாலும் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை குவித்தது. இதனையடுத்து ஆட்டத்தின் 110-வது ஓவரில் இந்தியா தனது ஆட்டத்தினை டிக்ளர் செய்துகொள்வதாக அறிவித்தது.
இதனையடுத்து 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகின்றது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்புகள் ஏதும் இன்றி 9 ஓவர்கள் முடிவில் 23 ரன்கள் குவித்துள்ளது. தற்போது அலெய்ஸ்டர கூக் 9(28), ஜென்னிங்ஸ் 13(27) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் துவங்கியது. இன்றைய ஆட்டத்தின் துவக்க ஓவரிலேயே இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்சி அளிக்கும் வகையில் கூக் 17(39) மற்றும் ஜென்னிங்ஸ் 13(31) வெளியேறினர். இவர்களை அடுத்து களமிறங்கிய ரூட் 13(40), போப் 16(39) என அடுத்தடுத்து வந்த வீரர்களும் விக்கெட்டை பறிகொடுத்து சென்றனர்.
6 விக்கெட் மீதமிறுக்கும் நிலையில் 450 ரன்கள் எடுக்கவேண்டிய இக்கட்டான நிலையில் தற்போது இங்கிலாந்து தத்தளித்து வருகின்றது!