#INDvsSA: முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 187 ரன்களுக்கு ஆல்-அவுட்
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணியில் கஜிஸோ ரபாடா மூன்று விக்கெட்டும், மோனி மோர்கெல், வெர்னான் பிலண்டேர் மற்றும் ஆண்டில் பெஹல்குவே தலா இரண்டு விக்கெட்டும், லுங்குசனி நிக்டி ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.
பத்தாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. புவனேஷ்வர் குமார் 49 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். ஜாஸ்ரிட் பம்ரா 7 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார்.
முதல் ஆட்டம் முடிய இன்னும் 17 ஓவர்கள் இருக்கும் நிலையில் இந்திய அணி தனது ஒன்பது விக்கெட்டையை இழந்துள்ளது. இன்னும் ஒரு விக்கெட் மட்டும் தான் கைவசம் உள்ளது. 9 விக்கெட் இழப்பு இந்திய அணி 170 ரன்கள் எடுத்துள்ளது
ஒன்பதாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. இஷாந்த் சர்மா 12 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் கேட்ச் அவுட் ஆனார். தற்போது புவனேஷ்வர் குமார் மற்றும் ஜாஸ்ரிட் பம்ரா விளையாடு வருகிறார்கள்.
எட்டாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. முகம்மது ஷமி 16 பந்துகளை சந்தித்து 8 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். தற்போது புவனேஷ்வர் குமார் மற்றும் இஷாந்த் சர்மா விளையாடு வருகிறார்கள்.
ஏழாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. ஹர்திக் பாண்டியா 5 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் கேட்ச் அவுட் ஆனார். தற்போது புவனேஷ்வர் குமார் மற்றும் முகம்மது ஷமி விளையாடு வருகிறார்கள். முதல் ஆட்டத்தில் இன்னும் 26 ஓவர்கள் உள்ள நிலையில், இந்திய தனது ஏழு விக்கெட்டை இழந்துள்ளது.
ஆறாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. பார்த்திவ் படேல் 22 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டும் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். தற்போது பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் விளையாடு வருகிறார்கள்.
ஐந்தாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. புஜாரா 179 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் மட்டும் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். தற்போது பாண்டியா மற்றும் பார்த்திவ் படேல் விளையாடு வருகிறார்கள்.
இந்தியா 55 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.
நான்காவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. அஜிங்கியா ரஹானே 27 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் மட்டும் எடுத்து மோர்கேல் பந்தில் எல்பிஃடபுள்யூ ஆனார். தற்போது புஜாரா(34) மற்றும் பார்த்திவ் படேல் விளையாடு வருகிறார்கள்.
மூன்றாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. இந்திய கேப்டன் விராத் கோலி 106 பந்துகளை சந்தித்து 54 ரன்கள் எடுத்து லுங்கி நேடி பந்தில் கேட்ச் அவுட் ஆனார். தற்போது புஜாராவுடன் சேர்ந்து அஜிங்கியா ரஹானே விளையாடு வருகிறார்.
25 ஓவர் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 60 பந்துகளில் 5 ரன்களும், இந்திய கேப்டன் விராத் கோலி 52 பந்துகளில் 24 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.
இரண்டாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. முரளி விஜய் 32 பந்துகளை சந்தித்து 8 ரன் எடுத்து ரபடா பந்தில் அவுட் ஆனார். தற்போது புஜாராவுடன் இந்திய அணி கேப்டன் விராத் விளையாடு வருகிறார்.
முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி லோகேஷ் ராகுல் 7 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். தற்போது முரளி விஜய் மற்றும் புஜாரா விளையாடு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி ''நியூ வண்டேர்ஸ் ஸ்டேடியத்தில்'' இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் தொடரும் தோல்வி முகம் - டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி அடைந்ததையடுத்து, நடக்கவிருக்கும் 3_வது டெஸ்ட் போட்டியிலாவது, இந்திய அணி ஆறுதல் வெற்றி அடையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகின்றது.
மேலும், இந்திய கிரிக்கெட் அணி இதுவரை தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சற்று நேரத்தில் போட்டி ஆரம்பமாக(பிற்பகல் 1:30 மணி) உள்ளது.