INDvsSA: மழையினால் கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!
இந்திய - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாம் நாள் மழையினால் கைவிடப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி ஷர்துல் தாக்கூர்,முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.
ALSO READ | IND vs SA: தென்னாபிரிக்க வீரர்கள் கையில் கருப்பு நிற ஸ்டிக்கர் அணிந்ததற்கான காரணம்?
தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் மற்றும் ராகுல் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்க்கு இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது. மயங்க் 60 ரன்களில் வெளியேற, அதன் பின்பு இறங்கிய புஜாரா முதல் பந்திலேயே அவுட் ஆனார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இந்திய அணி இழந்தது. அதன்பின் களம் இறங்கிய கோலி நிதானமாக விளையாடினார். 35 ரன்கள் அடித்த கோலி இந்த முறையும் சதம் அடிக்காமல் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராகுல் சதம் அடித்து விளாசினார். இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே சதம் அடித்து அணிக்கு உதவியுள்ளார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்து இருந்தது. இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. நாளை மழையின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று போட்டி கைவிடப்பட்டதால் மீதி உள்ள நாட்களில் 98 ஓவர்கள் பந்து வீசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | IND vs SA: கேஎல் ராகுல் சதம்! வலுவான நிலையில் இந்திய அணி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR