IND vs SA: தென்னாபிரிக்க வீரர்கள் கையில் கருப்பு நிற ஸ்டிக்கர் அணிந்ததற்கான காரணம்?

செஞ்சூரியன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர்கள் அனைவரும் கையில் கருப்புக் நிற ஸ்டிக்கர் அணிந்திருந்தனர்.   

Written by - RK Spark | Last Updated : Dec 27, 2021, 03:36 PM IST
IND vs SA: தென்னாபிரிக்க வீரர்கள் கையில் கருப்பு நிற ஸ்டிக்கர் அணிந்ததற்கான காரணம்?  title=

இந்தியாவுக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் போது தென்னாப்பிரிக்க வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு நிற பட்டை அணிந்தபடி காணப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவிய அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவு தினத்தை முன்னிட்டு அனைத்து வீரர்களும் அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது. 

sa

டுட்டு தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற ஆளுமை நெல்சன் மண்டேலாவின் அவர்களுடன் சேர்ந்து பயனித்தவர்.  ஆப்பிரிக்காவில் நிறவெறி தாக்குதல் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட போது அதனை எதிர்த்து போராடி இனப் பிரிவினை மற்றும் பாகுபாடு கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்த இயக்கத்தில் இவர் ஒரு முக்கிய நபராக இருந்தார்.   இவரது முயற்சிகளுக்காக, டுட்டுவுக்கு 1984-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஜனாதிபதி ரமபோசா டுட்டு பற்றி கூறியபோது "டுட்டு மிக சிறந்த ஒரு தலைவர்.  நிறவெறி எதிர்ப்பில் தீவிர பங்காற்றியவர்.  அனைவரும் சமம் என்று தன் கடைசி காலம் வரை போராடியவர்.  அசாதாரண அறிவாற்றல், நேர்மை மற்றும் நிறவெறி சக்திகளுக்கு எதிராக தன்னால் முடிந்த அனைத்தையும் சாதித்து காட்டியவர் என்று கூறியிருந்தார்.  

rahul

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.  கேஎல் ராகுல் சதத்தால் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது.  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்துள்ளது.

ALSO READ | IND vs SA: கேஎல் ராகுல் சதம்! வலுவான நிலையில் இந்திய அணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News