INDvsSA: செய்தியாளர்களை சந்தித்த விராட் கோஹ்லி! முக்கிய வீரர் காயம்!
இந்திய - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை தொங்குகிறது.
கேப்டவுனில் நாளை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி முதுகு வலி காரணமாக அந்த போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் (KL Rahul) இந்தியா அணியை வழிநடத்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்கும் விதமாக இந்திய அணி கடுமையான பயிற்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பந்து வீசும்போது சிராஜ்க்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக முகமது சிராஜ் கடைசி டெஸ்டில் விளையாடமாட்டார் என்று கோலி தெரிவித்தார். மேலும் பேசிய கோலி, “ ரிஷப் பந்த் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சிறந்த வீரராக வெளிவருவார் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அவருடன் பேசினோம், பந்த் தனது தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளும் கிரிக்கெட் வீரர் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
கேஎல் ராகுல் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டுகளை எடுக்க முயன்றார், ஆனால் தென்னாப்பிரிக்கா மிகச் சிறப்பாக விளையாடியது. ராகுல் முடிந்த வரை போராடினார், நான் சில விஷயங்களை வித்தியாசமாக செய்திருப்பேன், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கேப்டன் பாணி உள்ளது என்று கோஹ்லி கூறினார். புஜாரா மற்றும் ரஹானே பற்றி கேள்வி எழுப்பிய போது, "மாற்றங்கள் நிகழ்கின்றன, ஆனால் அவை இயற்கையாகவே நிகழ்கின்றன. மாற்றத்தை நாம் விட்டுவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஒரு குறிப்பிட்ட நபரை மாற்றத்திற்கு கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை" என்று கோஹ்லி கூறினார். தொடர் 1-1 என சமநிலையில் உள்ளதால், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளன.
ALSO READ | தோனியை கலாய்த்த KKR! தக்க பதிலடி கொடுத்த ஜடேஜா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR