இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நீயூலேன்ட்ஸ் கேப்டவுன் மைதானத்தில் நடைப்பெறுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.


முன்னதாக, கடந்த பிப்., 1 ஆம் நாள் கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. பின்னர் பிப்., 4 ஆம் தேதி நடைப்பெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்நிலையில் 6 ஒருநாள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


இன்று நடைப்பெறவுள்ள போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றால் தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்கிறது. முன்னதாக நடைப்பெற்ற இரண்டு போட்டிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் நிலவியது.


குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் மற்றும் சாஹல் இருவரும் 13 விக்கெட்டுகளை எடுத்தனர். தென்னாப்பிரிக்கா மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பலம் அதிகமாகவே தென்படுவதால், இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க வெற்றிக் கனியை பறிக்க 5 சுழற்பந்து வீச்சாளர்களை தயார் நிலையில் வைத்திருப்பதகா தகவல்கள் வெளியாகியுள்ளது.


எனினும் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை சமாளிக்கும் அளவிற்கு இந்திய அணியும் தயாரான நிலையில் உள்ளது. எனவே இன்றைய போட்டி ஆரவாரமாகவே இருக்கும் எனபதில் எவ்வித ஐயமும் இல்லை!