INDvsSL: இந்த 3 வீரர்களுக்கு இது கடைசி டெஸ்ட் தொடராக இருக்கலாம்!
இலங்கை அணி வரும் 24ம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
ஜூலை 2021-ல், இளம் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தது. ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, டி20 தொடரை கைப்பற்றியது. இந்த மாதம், இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இலங்கையும் இந்தியாவும் கடைசியாக 2017-ல் டெஸ்ட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-0 வித்தியாசத்தில் வென்றது. மற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தது. தற்போது இரு அணிகளும் இந்தியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது, இந்த முறை இலங்கை அணி கோப்பையுடன் தாயகம் திரும்புமா என்பது சுவாரஸ்யமாக இருக்கும். சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சிறப்பான சாதனை படைத்துள்ளது.
மேலும் படிக்க | மோசமான ஆட்டம்: புஜாரா, ரஹானேவை ரஞ்சி போட்டிகளுக்கு அனுப்ப திட்டம்!
மறுபுறம், தென்னாப்பிரிக்காவில் கடைசியாக டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி வலுவான மறுபிரவேசத்தை எதிர்பார்க்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய முழுநேர கேப்டனை இந்தியா இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் புதிய கேப்டனை பிசிசிஐ அறிவிக்கும் என தெரிகிறது. ரோஹித் ஷர்மா தான் அடுத்த டெஸ்ட் கேப்டன் பட்டியலில் முன்னோடியாக உள்ளார். வரவிருக்கும் டெஸ்ட் தொடர் இந்த வீரர்களுக்கு கடைசி போட்டியாக கூட இருக்கலாம்.
1. அஜிங்க்யா ரஹானே
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த அஜிங்க்யா ரஹானே சமீபத்தில் நீக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக அவர் ரன்கள் அடிக்கவில்லை. மோசமான ஸ்கோர்களை அடித்தாலும் பிசிசிஐ அவரது திறமையில் நம்பிக்கை வைத்து அவரை தென்னாப்பிரிக்காவில் தொடரின் மூன்று ஆட்டங்களிலும் விளையாட வைத்தது.
இருப்பினும், ரஹானே, மீண்டும் ஒருமுறை தனது மோசமான ரன்களில் அனைவரையும் ஏமாற்றினார். 3 போட்டிகளில் 22.67 சராசரியில் 136 ரன்கள் எடுத்தார். இலங்கை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அவர் இடம் பெற்றால் இதுவே அவரது கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போது ரஹானே ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்தியாவின் மற்றொரு அனுபவம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரரான சேதேஷ்வர் புஜாராவும் சிறந்த ஃபார்மில் இல்லை. பல ஆண்டுகளாக, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில குறிப்பிடத்தக்க நாக்களை விளையாடியுள்ளார். இருப்பினும், அவரது தற்போதைய பார்ம் மிகவும் மோசமாக உள்ளது. அவரது கடைசி டெஸ்ட் சதம் 2019 ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்தது. 2021 ஆம் ஆண்டில், அவர் 14 போட்டிகளில் 28.08 சராசரியில் 702 ரன்கள் எடுத்தார், இது அவரது வழக்கமான சராசரியான 43.9 ஐ விட மிகக் குறைவு. தென்னாப்பிரிக்காவில் நடந்த கடைசி டெஸ்ட் தொடரில் புஜாரா 3 போட்டிகளில் 22.67 சராசரியில் 136 ரன்களை எடுத்தார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி தொடராக இருக்கலாம்.
3. இஷாந்த் சர்மா
இஷாந்த் சர்மா எப்படி பட்ட வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இஷாந்த் பந்து வீச போராடினார். இங்கிலாந்திலும் நன்றாகப் பந்துவீசவில்லை. முகமது சிராஜ், பிரசித் கிரிஷா போன்ற இந்திய சீமர்களின் வருகை, இஷாந்த் ஷர்மாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் லெவன் அணியில் தொடர்ந்து விளையாடுவது கடினமாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மாவை சேர்ப்பதில் அணி நிர்வாகம் ஆர்வமாக இல்லை. இதனால், இலங்கைக்கு எதிரான தொடர், இஷாந்த் சர்மாவிற்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR