இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!

India vs Sri Lanka New Schedule: இந்தியா-இலங்கை இடையேயான தொடரில் மாற்றம். புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 15, 2022, 09:17 PM IST
  • 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக டெஸ்ட் தொடர் இருக்கும்.
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்/இரவு ஆட்டமாக இருக்கும்.
  • ஒரே மைதானத்தில் இரண்டு டி20 சர்வதேச போட்டிகள் நடைபெறும்.
இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ! title=

மும்பை: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் தொடரின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா-இலங்கை தொடர் அட்டவணையில் செய்யப்பட்ட மாற்றங்களை குறித்து பிசிசிஐ செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 15) அறிவித்தது. தற்போதைய அட்டவணைப்படி, இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி முதலில் மூன்று டி20 சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் விளையாடுகிறது. 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் இலங்கை இடையேயான டெஸ்ட் தொடர் இருக்கும்.

முந்தைய அட்டவணைப்படி, இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே  இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று டி20 சர்வதேச போட்டிகள் கொண்ட தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 சர்வதேச போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. இதன் பிறகு அடுத்த இரண்டு டி20 சர்வதேச போட்டிகள் தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

 

பின்னர் இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் மார்ச் 4 முதல் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதையடுத்து, தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 12-16 தேதிகளில் பெங்களூருவில் நடக்கிறது. இது பகல்/இரவு ஆட்டமாக இருக்கும்.

மேலும் படிக்க: INDvsWI: பிசிசிஐ ஸ்மார்ட் மூவ் - துணைக்கேப்டனாக ரிஷப் பன்ட் நியமனம்

ஜூலை 2021க்குப் பிறகு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் சர்வதேச தொடர் இதுவாகும். இந்தியா கடைசியாக இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தது. அங்கு அவர்கள் மூன்று ஒருநாள் மற்றும் பல டி20 போட்டிகளில் விளையாடினர். இதையடுத்து ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. இதன் பிறகு டி20 சர்வதேச தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.

புதுப்பிக்கப்பட்ட அட்டவணை நிலவரம்:

இந்தியா மற்றும் இலங்கை டி20 போட்டி:

முதல் டி20 போட்டி: 24 பிப்ரவரி 
போட்டி நடக்கும் இடம்: லக்னோ
போட்டி தொடங்கும் நாள்: வியாழக்கிழமை 

2வது டி20 போட்டி: பிப்ரவரி 26
போட்டி நடக்கும் இடம்: தர்மசாலா
போட்டி தொடங்கும் நாள்: சனிக்கிழமை

3வது டி20 போட்டி: பிப்ரவரி 27 
போட்டி நடக்கும் இடம்: தர்மசாலா
போட்டி தொடங்கும் நாள்: ஞாயிற்றுக்கிழமை 

மேலும் படிக்க: டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் இந்திய அணி போட்டிகளின் முழு அட்டவணை!

இந்தியா மற்றும் இலங்கை டெஸ்ட் போட்டி:

முதல் டெஸ்ட் போட்டி: மார்ச் 4-8 வரை நடக்கும். 
போட்டி நடக்கும் இடம்: மொஹாலி மைதானம்
போட்டி தொடங்கும் நாள்: வெள்ளிக்கிழமை 

இரண்டாவது டெஸ்ட்: மார்ச் 12-16 வரை பகல்/இரவு ஆட்டமாக நடக்கும். 
போட்டி நடக்கும் இடம்: பெங்களூரு
போட்டி தொடங்கும் நாள்: சனிக்கிழமை 

மேலும் படிக்க: ’கெட்ட வார்த்தை, அதட்டல்’ கேப்டன் ரோகித் சர்மாவின் மறுமுகம்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News