ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஏ மற்றும் பி பிரிவுகளில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். குரூப் ஏ-வில் கிளைமாக்ஸ் காட்சிகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. நியூசிலாந்து அணி 2 வெற்றிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 2 வெற்றிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 2 வெற்றிகளுடன் 3வது இடத்திலும் இருக்கின்றன. இந்த பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்!


இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தும் சூழல் இருக்கிறது. குரூப் பி பிரிவில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதிசயம் ஏதாவது நடந்தால் மற்ற அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு பற்றி யோசிக்கலாம். இதனால், இந்த 20 ஓவர் உலக கோப்பை இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது என்றே கூறலாம். இதுவரை நடந்த போட்டிகளில் ஒரு விநோத சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதாவது, இதுவரை இந்த உலக கோப்பையில் எந்த அணியும் தோல்வியே சந்திக்காத அணி என்ற நிலையில் இல்லை. அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது தோல்வியை சந்தித்து இருக்கின்றன. 



இப்படியான சம்பவம் உலக கோப்பை போன்ற பெரிய தொடரில் அரிதாகவே நடக்கும். அதேசமயம், இது கிரிக்கெட்டின் முதிர்ச்சியை காட்டுவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளன. எந்த அணியும், எந்த அணியையும் வீழ்த்தும் திறமையுடன் இருப்பது கிரிக்கெட்டுக்கு நல்லது என தெரிவித்துள்ளனர். இந்திய அணி கடைசி போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் நிச்சயம் அரையிறுதிக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்றுவிடும். 


மேலும் படிக்க | கோலியின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்த நபர்! கடுப்பில் விராட் செய்த காரியம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ