இந்தியன் பிரிமியர் லீக் டி20 தொடரின் 10-வது சீசனில் களமிறங்கும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.டோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கவுள்ளன. இந்நிலையில் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளார். ஆனால் தோனியாக தான் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது. கடந்த ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்ட 8 அணிகளில் தோனி தலைமையிலான புனே அணி 7-வது இடத்தையே பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியதாவது:-


கடந்த ஐபிஎல் போட்டியில் புனே அணி சிறப்பாக ஆடவில்லை. அதனால் இந்த ஐபிஎல் போட்டியில் திறமையான இளம் வீரர் ஒருவரை அணிக்கு கேப்டனாக நியமிக்க முடிவெடுத்தோம். அதனால் ஸ்மித்தை கேப்டனாக நியமித்துள்ளோம்.இந்த முடிவை தோனியிடம் கூறியபோது அவரும் அதை ஏற்றுக்கொண்டார். கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டாலும் புனே அணியின் ஒரு முக்கிய அங்கமாக தோனி தொடர்ந்து நீடிப்பார். அவர் மீது நாங்கள் மிகவும் மதிப்பு வைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.