ஐபிஎல் 2017: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய ஐதராபாத்
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் ஐதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளிகளை பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் நேற்றைய போட்டியில் விளையாடியது.
டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டதால், மும்பை அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. சிம்மன்ஸ் (1), ராணா (9), பார்த்திவ் (23), ஹர்திக் பாண்ட்யா (15) ரன்கள் எடுத்து அவிட் ஆனார்கள்.
ரோகித் சர்மா (67), அரைசதம் கடந்தார். போலார்டு (5), கரண் சர்மா (5) ரன்களில் அவுட் ஆகா, மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 138 ரன்கள் மட்டும் எடுத்தது.
அடுத்து ஐதராபாத் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. கேப்டன் வார்னர் (6) அவுட் ஆகா, அடுத்து ஷிகர் தவானுடன், ஹென்ரிக்ஸ் இணைந்தார். இந்த ஜோடியின் அபாரமான ரன் குவிப்பு கைகொடுக்க, ஐதராபாத் அணி, வெற்றியை எளிதாக்கினார்கள்.
ஹென்ரிக்ஸ் 44 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்த வந்த யுவராஜ் சிங் 9 ரன்களில் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஆனால் ஷிகர் தவான் தனது அரைசதம் பூர்த்தி செய்தார்.கடைசியில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் ஒரு பவுண்டரி அடிக்க, ஐதராபாத் அணி, 18.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவான் (62), ஷங்கர் (15)
அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியை அடுத்து ஐதராபாத் அணியின் 15 புள்ளி பெற்றுள்ளது. இதனால் அந்த அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு பிரகாசம் அடைந்துள்ளது.