10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.


அதன்படி முதலில் களம் இறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி திரிபாதி (37), ஸ்மித் (45), திவாரி (44 அவுட்இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.


பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களம் இறங்கியது. 


தொடக்க வீரர்களாக டிராவிட் ஹெட், விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். ஹெட் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். விராட் கோலி ஒருபக்கம் நிலையாக நிற்க, மறுபுறத்தில் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஜாதவ் 12 பந்தில் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.


டி வில்லியர்ஸ் (3), சச்சின் பேபி (2), ஸ்டூவர்ட் பின்னி (1), நெஹி (3), மில்னே (5), பத்ரி (2) அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, விராட் கோலி 48 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.


அரவிந்த் (8), சாஹரல் (4) அவுட்டாகாமல் இருக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் புனே அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப் சுற்றிற்கு செல்ல முடியும் என்ற நிலையில், பெங்களூரு அணி வாய்ப்பை இழந்தது.