ஐபிஎல் 2017, போட்டி 49: கொல்கத்தா மற்றும் பஞ்சாப் பலப்பரீட்சை
இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு மொகாலியில் நடைபெறும்.
கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி 12 ஆட்டத்தில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்து நெருக்கடிக்கு உள்ளான கொல்கத்தா அணி தனது கடைசி ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி இழந்த பார்மை மீட்டுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தினால் எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம். இதனால் கொல்கத்தா அணி மிகுந்த கவனத்துடன் விளையாடக்கூடும் என கருதப்படுகிறது.
மேக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணி 11 ஆட்டத்தில், 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைந்த அளவிலேயே உள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் பெரிள அளவிலான வெற்றியை வசப்படுத்தினாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்துதான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா இல்லையா என்பது தெரியும்.
இன்று மாலை 8 மணிக்கு நடைபெறும் போட்டி சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லைன், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
கிளென் மேக்ஸ்வெல்(கேப்டன்), டேவிட் மில்லர், மனன்வோரா, அக் ஷர் படேல், குர்கீரத் சிங், அனுரீத் சிங், சந்தீப் சர்மா, ஷான்மார்ஷ், விருத்திமான் சாஹா, நிகில் நாயக், மோகித் சர்மா, மார்க்ஸ்ஸ்டோனிஸ், கே.சி.கரியப்பா, அர்மான் ஜாபர், பிரதீப் ஷாகு, ஸ்வப்னில்சிங், ஹசிம் ஆம்லா, மோர்கன், ராகுவல் டிவாட்டியா, நடராஜன், மேட்ஹென்றி, வருண் ஆரோன், மார்ட்டின் குப்தில், டேரன் சமி, ரிங்கு சிங்.