10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் லயன்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 


வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசியது. குஜராத் தொடக்க வீரர்களாக டுவைன் ஸ்மித், மெக்கல்லம் களமிறங்கினர். மெக்லநாகவ் வீசிய முதல் ஓவரின் 2 வது பந்திலேயே டுவைன் ஸ்மித் டக் அவுட்டானார். அடுத்து மெக்கல்லமுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் 2 வது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்தனர். ரெய்னா 28 ரன், மெக்கல்லம் 64 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.


இஷான் கிஷன் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் - ஜேசன் ராஜ் ஜோடி விளையாடி ரன் சேர்க்க, குஜராத் லயன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. 


இதைத் தொடர்ந்து, 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை களமிறங்கியது. பார்திவ், பட்லர் இருவரும் துரத்தலை தொடங்கினர். பிரவீன் வீசிய முதல் ஓவரில் 2 வது பந்தில் பார்திவ் டக் அவுட்டாகி வெளியேற, மும்பை அணிக்கும் அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. பட்லர் - நிதிஷ் ராணா ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்தது. ராணா 53 ரன், பட்லர் 26 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.


ரோகித் - போலார்டு ஜோடி 4 வது விக்கெட்டுக்கு அதிரடியாக 68 ரன் எடுத்தது. போலார்டு 39 ரன்னுடன் விடைபெற்றார். கடைசி ஓவரில் 8 ரன் தேவைப்பட்ட நிலையில் ரோகித், ஹர்திக் பதற்றமின்றி விளையாடி வெற்றியை வசப்படுத்தினர். 


இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து வென்றது.