நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. 


பெங்களூரு அணி சார்பில் கிரிஸ் கெயில் அதிகபட்சமாக 48 ரன்களும், விராட் கோலி 58 ரன்களையும் குவித்திருந்தனர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. 


162 ரன்களை எடுத்தால் வெற்றி என நிலையில் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் எஸ்.வி. சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் இரண்டாவது பந்திலேயே பெவிலியன் திரும்பினார். 


இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீரரான கே.கே. நாயர் 26 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, எஸ்.எஸ். ஐயர் 32 ரன் மற்றும் ஆர்.ஆர். பண்ட் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 


இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மொகமது ஷமி ஸ்டம்பிங் முறையில் தனது விக்கெட்டை இழந்தார். பின் கடைசி பந்தில் நதீம் கேட்ச் அவட் ஆக, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.