கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் முதல் நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு வருட தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் கலந்துக்கொள்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதால், தமிழ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் 2018: எந்த அணி? எந்த வீரரை? தக்கவைத்து கொண்டது- கிளிக்


இந்நிலையில், இந்த ஐபிஎல் சீசனில் யார் கோப்பையை வெல்லவார் என்று இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் விரேந்தர சேவாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


அவர் கூறியது,


இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணிகள் தான் நிச்சயம் கோப்பையை வெல்லும். மேலும் இந்த வருடம் ஒவ்வொரு அணியிலும் புதிய வீரர்கள் அதிகம் விளையாட உள்ளதால் ஐபிஎல் சீசன் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் என கூறியுள்ளார்.