IPL 2020: ஐபிஎல் ஏலத்தில் 3 வீரர்கள் குறிவைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்
2020 ஐபிஎல் ஏலத்தில் முக்கியமான மூன்று வீரர்களை குறிவைக்கும் எம்.எஸ். தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
புது டெல்லி: 13 வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் வருகிற 19 ஆம் தேதி நடக்க உள்ளது. அதற்காக தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்க அணியின் உரிமையாளர்கள் மற்றும் கேப்டன் தயாராகி வருகின்றனர். எனவே, வரவிருக்கும் 2020 ஐபிஎல் (Indian Premier League) ஏலம் ஒரு சுவாரஸ்யமான விவகாரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியை பொறுத்த வரை நல்ல வீரர்களை கொண்டுள்ளது. ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சில வீரர்களின் சேவைகளைப் பெற விரும்புகிறார்கள். எனவே எம்.எஸ். தோனி (MS Dhoni) தலைமையிலான அணிக்கு நல்ல பொருத்தமாக இருக்கும் மூன்று வீரர்களைப் பற்றி பார்ப்போம்.
பியூஸ் சாவ்லா (Piyush Chawla)
மிகவும் ஆச்சரியமான திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியவர். பல போட்டிகளில் அணிக்கு பக்க பலமாக இருந்துள்ளார். ஆனால் அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளியேற்றி உள்ளது. எனவே, இந்த தொடரில் அவரைப் பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் ஆர்வமாக உள்ளது. சாவ்லா ஒரு தந்திரமான சுழல் பந்து வீச்சாளர். ஒருவேளை அவர் சென்னை அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், சேபாக் ஸ்டேடியத்தில் அவரின் சுழல் மேஜிக் செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் எதிரணிக்கு நல்ல தாக்குதல் தரக்கூடிய சுழற்பந்து வீச்சாளராக அணியில் இருப்பதை தோனி விரும்புகிறார். அதற்கு சாவ்லா சரியான தேர்வு இருப்பார் எனத் தெரிகிறது.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் (Marcus Stoinis)
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆனா ஸ்டாய்னிஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விடுவித்துள்ளது. இவர் ஒரு ஆல்-ரவுண்டர் வீரர் ஆவார். இவர் வேக மாற்றங்களுடன் பந்து வீச்க்கூடியவர். மேலும் எப்போதும் ஒரு பாதுகாப்பான பீல்டராக இருந்து வருகிறார். இக்கட்டான நிலையில் அணிக்கு நல்ல பினிஷராக இருக்க முடியும். சிஎஸ்கே நாக் அவுட் கட்டங்களுக்கு வருவதற்கான வாய்ப்புக்கு இவர் உறுதுணையாக இருப்பார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு நல்ல தேர்வாக இருப்பார்.
சாம் குர்ரன் (Sam Curran)
இவர் இளம் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆவார். மேலும் எம்.எஸ். தோனி விரும்பும் வீரர். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இரண்டிலும் நன்றாக ஆடக்கூடியவர. பந்தை சரியாக கையளுவதில் ஒரு புத்திசாலித்தனமான ஆபரேட்டர் மற்றும் திடமான மனநிலை கொண்ட ஒரு வீரர். குர்ரனை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விடுவித்துள்ளது. இதனால் அவருக்கு சென்னை அணி கதவைத் திறக்க உள்ளது. சமீபத்திய ஆட்டங்களில் இங்கிலாந்து அணிக்காக நல்ல பார்மில் விளையாடி இருந்தார். எனவே, ஐ.பி.எல். ஏலத்தின் போது இவரை தேர்ந்தெடுக்க அணிகள் போட்டிபோடும் எனத் தெரிகிறது.
ஐபிஎல் வரலாறு: இதுவரை கோப்பையை வென்றது எந்தெந்த அணி? ஒரு அலசல்
2020 ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்க உள்ளது. அதில் 73 வீரர்கள் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர். அதில் 29 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்யலாம்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.