IPL 2020 நாளை UAE-ல் தொடங்கவுள்ளது. இந்த சீசன் துவங்குவதற்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவு விருந்தில், CSK Franchise, எம்.எஸ். தோனி (MS Dhoni) உள்ளிட்ட வீரர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கியது. கடந்த ஆண்டு, 15 போட்டிகளில், 44.20 என்ற சராசரி ரன்களுடனும், மூன்று அரைசதங்களுடனும் 416 ரன்களை எடுத்து அசத்திய சாதனைக்காக, எம்.எஸ். தோனிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. தோனி கடந்த ஆண்டும் அணியை வெகு நேர்த்தியாக வழிநடத்தி, இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார் என்பது குறிப்பொடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வியாழனன்று நடந்த நிகழ்வுக்குப் பிறகு, CSK இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த நிகழ்வின் படங்கள் படங்கள் வெளியிடப்பட்டன. மேலும், பதிவில், "எங்கள் வழக்கமான பருவத்திற்கு முந்தைய இரவு உணவு இந்த முறை மறக்கமுடியாத மதிய உணவாக மாறியது. எங்கள் லயன்ஸ் சில சூப்பர் டூப்பர் விருதுகளை அள்ளிச் சென்றன. அணியை அசத்தலாக வழிநடத்தியதற்காகவும், IPL 2019-ல் சூப்பர் கிங்ஸில் அதிக ரன்கள் எடுத்ததற்காகவும் #தல தோனி கௌரவிக்கப்பட்டார்” என எழுதப்பட்டிருந்தது.



CSK-வின் அதிரடி ஆட்டக்காரர் ஷேன் வாட்சனுக்கு (Shane Watson) தன் வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தி ஆடியதற்காக விருது வழங்கப்பட்டது. ஷேன் வாட்சன் ஒரு முறை தனக்கு அடி பட்டு ரத்தம் கொட்டுவதையும் பொருட்படுத்தாமல் CSK-விற்காக ஆடியது நினைவிருக்கலாம்.



இந்த சீசனில் CSK-விற்காக முதன் முறையாக ஆடவுள்ள சாய் கிஷோர் மற்றும் பியூஷ் சாவ்லா (Piyush Chawla) ஆகியோர் தங்கள் மஞ்சள் ஜெர்சிகளையும் ‘கேப்டன் கூல்’ மற்றும் ஃப்ளெமிங்கிடமிருந்து (Fleming) பெற்றனர்.


கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த IPL ஏலத்தின்போது இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோரை அவரது அடிப்படை விலையான ரூ .20 லட்சத்தில் CSK பெற்றனர். சாவ்லா ரூ .6.75 கோடிக்கு பெறப்பட்டார்.


ALSO READ: IPL 2020: MI vs CSK போட்டிக்கு ரெடியா? என்ன time, எந்த channel? முழு விவரம் உள்ளே!!


"சாம் மற்றும் ஜோஷ் எங்கள் கூடாரத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் புதிய சிங்கங்களான கிஷோர் மற்றும் பியுஷ் சாவ்லா அவர்களது மஞ்சள் ஜெர்சிகளைப் பெற்றனர்” என CSK ட்வீட் செய்துள்ளது.


IPL 2020-ன் முதல் ஆட்டத்தில் நாளை சென்னை சூப்பர் கிங்கஸ் மும்பை இந்தியன்சை (MIvsCSK) எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளின் ரசிகர்களும் அதிக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 


ALSO READ: IPL 2020: ‘IPL CUP என்னவோ CSK-வுக்கு தான்’ அடித்துக் கூறுகிறார் Shane Watson!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR