தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக், IPL 2020, இல் சென்னை சூப்பர் கிங்சுக்கு (CSK) க்கு ஒரு மோசமான சீசனாக இருந்து வருகிறது. இதுவரை CSK ஆடியுள்ள ஏழு ஆட்டங்களில் ஐந்து தோல்விகளைப் பெற்று புள்ளிகள் அட்டவணையில் ஆறாவது இடத்தில் உள்ளனர். விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) சனிக்கிழமையன்று சீசனின் ஏழாவது ஆட்டத்தில் CSK-ஐ 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற கோஹ்லி முதலில் துபாயில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆரோன் பிஞ்ச் (2) மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் (0) இருவரும் எளிதாக ஆட்டமிழந்தபோதும், கோலி அபாரமாக ஆடி 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் எடுத்தார்.


பதிலுக்கு, CSK பேட்டிங் வரிசையானது RCB பந்து வீச்சாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சியை தாக்குப்பிடிக்க முடியாமல், 132/8 என்ற ஸ்கோருடன் தோல்வியைத் தழுவியது. மீண்டும் ஒரு முறை ஒரு ஏமாற்றத்தைத் தான் CSK எதிர்கொண்டது. CSK அணியின் பலமாக இருந்த பேட்டிங் இப்போது உயிரே இல்லாமல் இருக்கிறது.


CSK-ன் 5 வது தோல்விக்குப் பிறகு, ரசிகர்கள் மீண்டும் சமூக ஊடகங்களில் சுரேஷ் ரெய்னாவை (Suresh Raina) அழைக்கத் துவங்கினர்.


அணியின் முன்னாள் துணை கேப்டனும், IPL-ல் CSK –விற்கு அதிக ரன்களை எடுத்தவர் என்ற பெருமையும் கொண்ட சுரேஷ் ரெய்னா, இந்த சீசன் துவங்குவதற்கு முன்னதாக போட்டிகளில் இருந்து விலகினார். அவர் தற்போது தனது குடும்பத்துடன் இந்தியாவில் உள்ளார்.


எம்.எஸ் தோனி தலைமையிலான அணியில் அவரது காலி இடம் பெரும் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறி ரசிகர்கள் அவரை மீண்டும் அணிக்கு அழைத்த வண்ணம் உள்ளனர்.


ALSO READ: ‘CSK-வை ஒரு Government Job போல் நினைக்கிறார்கள்’ வீரர்களின் மெத்தனத்தை சுட்டிக்காட்டிய Sehwag


2008 ஆம் ஆண்டு IPL-ன் தொடக்க பதிப்பிலிருந்து CSK பேட்டிங் வரிசையின் வலுவான தூண்களில் ரெய்னாவும் ஒருவராக இருந்துள்ளார். போட்டிகளில் அவரது அசாத்திய நிலைத்தன்மைக்காக அவர் Mr.IPL என்று அழைக்கப்படுகிறார். மேலும் அவர் இல்லாதது இந்த சீசனில் CSK-வின் முழு சமநிலையையும் பாதித்துள்ளது என்பது தெளிவாகிறது. வெற்றியின் நாடியை பிடிக்க முடியாமல் CSK அணி போராடி வருகிறது. இன்னும் ஒன்றல்லது இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தால், ப்ளே ஆஃப்களுக்கு தகுதி பெறுவதற்கான CSK அணியின் கனவு கலைந்து விடும்.


‘சின்ன தல’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுரெஷ் ரெய்னாதான் இதிலிருந்து CSK-வை காப்பாற்ற முடியும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ரெய்னாவை பல வழிகளில் மீண்டும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம். 






ALSO READ: IPL 2020: CSK ‘சின்ன தல’-ய பெருசா miss பண்ணுவாங்க – Dean Jones!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR