IPL 2020 FINAL: நான்கு முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் எப்படியாவது கோப்பையை வென்று விடும் துடிப்பில் டெல்லி கேபிடல்ஸ் அணி இருக்கிரது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் 2020 இறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் ஸ்ரேயாஸ் ஐயரின் டெல்லி தலைநகரங்களுக்கு எதிராக களம் இறங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2020 சீசன் முழுவதும் மும்பை இண்டியன்ஸ் அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லீக் போட்டிகளிலும், அதிக புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. அதேபோல், முதல் தகுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது மும்பை அணி


சூப்பர் பவுலர்களாக ஜஸ்பிர்தி பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் (Jasprti Bumrah and Trent Boult) இருப்பதால் மும்பை அணியின் நிலை வலுவாக உள்ளது. அதுமட்டுமல்ல, அதிரடிட் ஆட்டத்திற்கு குயின்டன் டி கோக் மற்றும் இஷான் கிஷன் (Quinton de Kock and Ishan Kishan) என இரு தூண்களும் மும்பை அணிக்கு பக்க பலமாக இருக்கின்றனர்.
ஸ்கிப்பர் ரோஹித் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிவிட்டார். அவரால் பெரிய அளவில் ரன் எடுத்து சோபிக்க முடியவில்லை. எது எப்படியிருந்தாலும் சரி, நான்கு முறை ஐபிஎல் சாம்பியனாக வாகை சூடிய மும்பை இண்டியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் வலுவாக இருக்கிறது.  


இந்த ஐபிஎல்லின் முதல் பாதியில் டெல்லி கேபிடல்ஸ் அதிரடியாக பல வெற்றிகளை பதிவு செய்தது. சுவாரஸ்யமாக இருந்தன, பின்னர் நிலை சற்று தடுமாறியது. ஷிகர் தவானின் பங்கு, தலைநகரத்தின் பெயரை வைத்திருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானது. ஹைதராபாத் அணிக்கு எதிராக மார்கஸ் ஸ்டோனிஸை அனுப்பி இன்னிங்ஸைத் தொடங்கும் ஷ்ரேயஸ் ஐயரின் முடிவு சமயோஜிதமாக வேலை செய்து வெற்றியை தேடித் தந்தது.


ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாக இருந்தாலும், அவரும் இந்த போட்டித் தொடரில் பெரிய அளவில் எதையும் சாதிக்கவில்லை. இந்த ஆண்டு போட்டிகளில் பல ஆச்சரியமான விஷயங்கள் நடந்தேறின. வீரர்களில் பலர், தங்கள் முதல் இறுதிப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.  நடப்பு சாம்பியன் மும்பை அணியை வென்று டெல்லி மகுடம் சூடும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறது.


மும்பை இந்தியன்ஸ் அணியில் இறுதிப் போட்டியில் இவர்கள் களம் இறங்கலாம்: ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, செளரப் திவாரி, கிருனல் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், ஜேம்ஸ் பாட்டின்சன்


டெல்லி கேபிடல்ஸ் அணியில் இறுதிப் போட்டியில் களம் இறங்குபவர்கள் இவர்களாக இருக்கலாம்: ஷிகர் தவான், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், சிம்ரன் ஹெட்மியர், ஆக்சர் படேல், அஜிங்க்யா ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, துஷார் தேஷ்பாண்டே



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR