IPL 2020 KKR vs CSK: கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடப்போகும் 11 சென்னை வீரர்கள் யார்?
இன்றைய KKR அணிக்கு எதிரான ஆட்டத்தில் அணியில் CSK அணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல், அதே வீரர்கள் விளையாடக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Chennai Super Kings vs Kolkata Knight Riders: எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி இன்று (புதன்கிழமை) இரவு தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள உள்ளது.
முந்தைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிராக சிஎஸ்கே அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் மற்றும் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் இருவரும் மேற்கொண்ட அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணியின் தொடர்ந்து மூன்று தோல்விக்கு பிறகு, இந்த வெற்றி CSK ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலை தந்துள்ளது. மேலும் இன்றைய KKR அணிக்கு எதிரான ஆட்டத்தில் அணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல், அதே வீரர்கள் விளையாடக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், கே.கே.ஆர் அணி வெற்றி, தோல்வி என ஒரு கலவையான பயணத்தில் உள்ளனர். அவர்கள் ஆடிய நான்கு ஆட்டங்களில் 2 வெற்றி மற்றும் 2 தோல்வி பெற்றுள்ளனர். இதுவரை கரீபியன் படைகளான ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் சுனில் நரைன் இன்னும் பெரிய அளவில் எதுவும் ஆடவில்லை. எனவே இன்றைய போட்டியில், அவர்களிடமிருந்து ஒரு சிறந்த ஆட்டத்தை அணி நிர்வாகம் எதிர்பார்க்கும். அதேநேரத்தில் இன்றைய மோதலுக்காக நரைனை கைவிட்டு இங்கிலாந்து அணியின் இளம் வீரரான டாம் பாண்டன் களம் இறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஐபிஎல் (IPL 2020) பதிப்பில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
ALSO READ: CSK vs KXIP: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெறித்தனமான வெற்றியை பதிவு செய்த CSK
கே.கே.ஆருக்கு எதிராக விளையாடப்போகும் சி.எஸ்.கே அணியின் வீரர்கள் குறித்து ஒரு பார்வை:
ஷேன் வாட்சன் (Shane Watson): முதல் சில போட்டிகளில் சரியாக விளையாடதபோதிலும் ஷேன் வாட்சன் தனது தேர்வை பஞ்சாப் அணிக்கு எதிராக நன்றாக ஆடி நியாயப்படுத்தியுள்ளார்.
ஃபாஃப் டு பிளெசிஸ் (Faf du Plessis): இந்த பருவத்தில் இதுவரை சென்னைக்கு மிகவும் நம்பகமான பேட்ஸ்மேனாக ஃபாஃப் டு பிளெசிஸ் இருந்துள்ளார். அவரது திறன் அணிக்கு நல்ல பயனாக அமைகிறது. ஆரஞ்சு தொப்பியின் பந்தயத்தில் மூன்றாவது வீரராக டு பிளெசிஸ் உள்ளார்.
அம்பதி ராயுடு (Ambati Rayudu): அம்பதி ராயுடு காயத்திலிருந்து மீண்டு சிஎஸ்கே விளையாடும் லெவன் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆனால் பஞ்சாபிற்கு எதிராக ஆடத் தவறிவிட்டார். மூன்றாவது வீரராக களம் இறங்கும் இவர், கே.கே.ஆர் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
ALSO READ: IPL வரலாற்றில் 4500 ரன்களை கடந்தார் CSK கேப்டன் MS.தோனி...!
கேதார் ஜாதவ் (Kedar Jadhav): ஐபிஎல் 2020 இல் இதுவரை கேதார் ஜாதவ் சரியாக தனது திறமையை காட்டவில்லை. இப்போது ஜாதவ் மீண்டும் சரியாக பார்மில் வந்து சில முக்கியமான பங்களிப்புகளைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
எம்.எஸ். தோனி (MS Dhoni): எம்.எஸ்.தோனி தனது மெதுவான பேட்டிங் மற்றும் தனது முந்தைய ஆட்டத்தைப் போலல்லாமல், போட்டியின் வெற்றியை கணிக்க முடியாத காரணமாக விமர்சனங்களைப் பெற்று வருகிறார். இருப்பினும், இப்போது அவரது அணி மீண்டும் பாதையில் வந்துள்ளது, அவர் இன்னும் சுதந்திரமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja): அவர் இந்த அணியின் இதய துடிப்பு. ரவீந்திர ஜடேஜா பேட் மற்றும் பந்து இரண்டிலும் சரியான பாதையில் இருக்கிறார். அவரது பீல்டிங் எப்போதும் பேசக்கூடியது.
சாம் குர்ரான் (Sam Curran): ஐபிஎல் 2020 முதல் நாள் தனது திறனைக் காட்டியதற்காக இந்த இளம் ஆல்ரவுண்டரை சிஎஸ்கே ஆதரிக்கக்கூடும். அவர் விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்.
டுவைன் பிராவோ (Dwayne Bravo): இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் அவர் தனது கரீபியன் ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு எதிராக டெத் ஓவர் வீச தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
ALSO READ: IPL 2020: Suresh Raina, Harbhajan Singh ஆகியோருடனான ஒப்பந்தங்களுக்கு The End
ஷர்துல் தாகூர் (Shardul Thakur): ஷார்துல் தாக்கூர் KXIP அணிக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் விரைவாக விக்கெட்டை கைப்பற்ற வேண்டும்.
பியூஷ் சாவ்லா (Piyush Chawla): பியூஷ் சாவ்லா தனது அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.
தீபக் சாஹர் (Deepak Chahar): சிஎஸ்கேவின் புதிய பந்து வீச்சாளர் தீபக் சாஹர், அவர் விரைவில் சிறந்த பாதைக்கு வரவேண்டும்.
கே.கே.ஆருக்கு எதிராக சி.எஸ்.கே கணித்துள்ள லெவன்: ஷேன் வாட்சன், ஃபாஃப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி (சி / டபிள்யூ.கே), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, சாம் குர்ரான், ஷார்துல் தாகூர், பியூஷ் சாவ்லா, தீபக் சஹார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR