மும்பை இண்டியன்ஸை வெற்றி கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
![மும்பை இண்டியன்ஸை வெற்றி கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மும்பை இண்டியன்ஸை வெற்றி கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2020/11/03/174253-srh-win.jpg?itok=nqxvoM3B)
10 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று அபாரமான திறமையை வெளிகாட்டியுள்ளது. ஃப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிட்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
10 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று அபாரமான திறமையை வெளிகாட்டியுள்ளது. ஃப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிட்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
ஐ.பி.எல் போட்டித்தொடரின் 56 போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் விக்கெட் இழப்பு ஏதுமின்றி, 17.1 ஓவரில் 151 ரன்கள் எடுத்து சாதனையை பதிவு செய்துள்ளது.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது மும்பை அணி.
டேவிட் வார்னர் 58 பந்துகளை எதிர்கொண்டு 85 ரன்களை விளாசித் தள்ளினார். டேவிட் வார்னர் 10 பவுண்ட்ரிகளையும் ஒரு சிக்ஸரையும் அடித்தார்.
சாஹா 445 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். 7 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் அடித்தார் சாஹா. அணியின் வெற்றிக்கு தூணாக இருந்தனர்.
picture courtesy: sunrisers hydrabad twitter
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR